அழைப்பு

Each syndicate/group/union organizes its activities autonomously with their own focus. The following call to action is part of a common framework that will help to visually connect those activities and support communication on the global level. Feel free to subscribe and/or contact the Global May Day 2019 mailing list [globalmayday[AT]lists.riseup.net], if you support the call and/or want to connect with others to establish a solidarity partnership.
அழைப்பு download .pdf


பன்னாட்டு மே நாள்
1 மே, 2019

ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று பன்னாட்டு உழைப்பாளர்கள் நாளை வீதிப் போராட்டங்கள்,வேலை நிறுத்தங்கள் என தொழிலாளர்கள் கொண்டாடுகிறார்கள். சுதந்திர தொழிலாளர்கள் சங்கம்(Free Workers Union – FWU) மற்றும் உலக தொழில்துறை தொழிலாளர்கள்(Industrial Workers of the World – IWW) கூட்டமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த மே நாள் அழைப்பின் மூலம் உலகெங்கும் அடிதட்டு உழைக்கும் மக்கள் மத்தியில் செயல்படும் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் இயக்கங்கள் தங்களது மே நாள் நிகழ்வுகளை இணைத்துக் கொள்ளுமாறும் அதன் மூலம் தொழிலாளர் போராட்டங்களின் ஒரு பன்னாட்டு கோணத்தை அனைவரின் பார்வைக்கு கொண்டு வருமாறும் ஊக்குவிக்க விரும்புகிறோம்.

தொழிலாளர்களும் மாணவர்களுமாகிய நாம், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் நிற்கிறோம், ஏனெனில் நாம் அனைவரும் லாப நோக்கத்திலான நலன்களுக்கு எதிரான போராட்டங்களில் இணைந்திருக்கிறோம். நிதி நிலை அறிக்கைகளில் சமூக நலத்திட்டங்களுக்கு குறைக்கப்படும் நிதி, அயல் பணிமுறை (outsourcing), மோசமான ஊதிய நிலைமை, தனியார்மயம், அதிகரிக்கின்ற வாழ்க்கை செலவு மற்றும் கல்விச் செலவு போன்ற சில உலக பொருளாதார அமைப்பின் சில அறிகுறிகளாக இருக்கின்றன. உழைப்பு சுரண்டலையும், போட்டியையும் அடிப்படையாகக் கொண்ட இந்த பொருளியல் அமைப்பு நம்முடைய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் வணிகமயமாக்குகிறது.

பள்ளி, கல்லூரி,பணியிடம் மட்டுமின்றி குழந்தை முதல் இளைஞர் வரை செயல்திறனை அதிகரிக்கச் சொல்லி தொடர்ந்து கொடுக்கப்படுகின்ற அழுத்தமானது மிகப் பெரிய அதிருப்தியான ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலாளித்துவ அமைப்பும் அதன் தேச அரசு கட்டமைப்பும் ஒடுக்குமுறையான சமூக கட்டமைப்பில் இருந்து விடுவிக்கும் திறன் (development of emancipatory capabilities) வளர்ச்சியை விட போட்டிக்கும் லாபத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றது.

நாம் இந்த நிலைமையை சற்றே அசைத்து பார்த்து விட்டு மட்டும் செல்ல விரும்ப வில்லை. மாறாக, நாம் இந்த நிலைமையை முற்றிலும் வெற்றி கொள்ள நினைக்கிறோம்.

முதலாளித்துவ அமைப்பானது ஒரு பன்னாட்டு அமைப்பாக இருக்கும்போது, பன்னாட்டு தொழிலாளர்களும் ஒன்றாக இணைய வேண்டிய தேவை உள்ளது. எல்லைகள் கடந்து நாம் ஒன்றிணையும் போது ஏற்படும் பன்னாட்டு தொழிலாளர்களுக்கு இடையேயான இணைப்பு என்பது ஒவ்வொரு தேசத் தொழிலாளியின் நிலைமையை அனைவரின் பார்வைக்கும் கொண்டு செல்ல உதவும். மேலும், நமது தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல், மோசமான வாழ்க்கை நிலைமை, பணியிடச் சூழல் போன்றவைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு புதிய ஆற்றலையும், புதிய செயல் எல்லைகளையும் கொடுத்து உதவும்.

ஒரே தொழில்துறையின் உற்பத்தி வளையத்தில்(value added chain) ஈடுபடும் தொழிலாளர்கள் பன்னாட்டு அளவில் ஒன்று சேர்ந்தால் நமது கூட்டுபேர சக்தி என்பது பல மடங்கு பெருகும். எடுத்துக்காட்டாக, நாம் இதை கற்பனை செய்து பார்க்கலாம். பி.ஏ.எஸ்.எப் (BASF, Germany) வேதியியல் நிறுவனம், லோமின், மரிக்கானா (LOMIN, Marikana/South Africa) சுரங்க நிறுவனத்தின் முதன்மை வாடிக்கையாளர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லோமின் சுரங்கத் தொழிலாளர்களோடு, பி.ஏ.எஸ்.எப் தொழிலாளர்களும் ஒன்றாக இணைந்து இருந்தால் விளைவு என்னவாக இருந்திருக்கும்? ஒரு வேளை சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை தடுக்கப்பட்டு இருக்கலாம்.

மற்றுமொரு உதாரணம். இலங்கையின் ஆடை உற்பத்தி துறையில் வேலை செய்த தொழிலாளர்கள் (H&M சில்லரை விற்பனை நிறுவனத்திற்கு ஆடையை உற்பத்தி செய்தவர்கள்) அவர்களின் அடிப்படை வாழ்வாதார தேவைக்கு போதிய ஊதியத்திற்கான போராட்டம் செய்தனர். அதே நாளில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எச் & எம் கடைத் தொழிலாளர்கள் வெளியில் நின்று இலங்கை ஆடை உற்பத்தி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றனர். ஆடையை உற்பத்தி செய்தவர்கள், சில்லரை வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஒரே உற்பத்தி வளையத்தில் வருகின்ற அனைத்து தரப்பும் ஒன்று சேர்ந்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு ஆதரவாக ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பதையே இந்த நிகழ்வு காட்டியது.

இதேபோல், அமேசான் நிறுவனத்தின், சரக்கு போக்குவரத்து நிலைய தொழிலாளர்கள் சங்கம் வேர்.டி(ver.di) 2016 இல் ஜெர்மனியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. போராடிய தொழிலாளர்களுக்கு எதிராக போலந்து சரக்கு போக்குவரத்து நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதால், போலந்து அமேசான் தொழிலாளர்கள் ஆதரவு போராட்டம் நடத்தினர். இப்போது, உலகம் முழுக்க, அமேசான் தொழிலாளர்கள் செயல்பாட்டு குழுக்களை உருவாக்கி ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இறுதியாக ஐ.டி தொழிலாளர்கள் தங்களுடைய மோசமான பணியிட சூழலை எதிர்த்து எல்லைகள் கடந்து ஒன்றிணைந்தார்கள். உதாரணமாக, கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நகரங்களில் இருந்த கூகுள் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஐ.டி தொழிலாளர்கள் பணியிட பாலியல் வன்முறைகளுக்கு எதிராக ‘வெளி நடப்பு’(walk out) போராட்டத்தை ஒரே நாளில் ஒருங்கிணைத்தனர். அதே போல், உலகம் முழுக்க டிஜிட்டல் விளையாட்டு துறையில் பணிபுரியும் ஐ.டி தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது.

பன்னாட்டு அளவில் ஒருங்கிணைக்கப்படும் மே நாள் 2019 நிகழ்வின் மூலம் பன்னாட்டு ஆதரவு இயக்கத்தை கட்டமைக்கும் முயற்சி வழியாக தொழிலாளர்களுக்கான நல் வாழ்க்கை எனும் கூட்டு இலக்கை அடைய பாடுபடுகிறோம். குறிப்பாக தேசியவெறி, இனவெறி போன்ற போக்குகள் அதிகரித்து உள்ள சூழலில், பொதுவான போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் கொண்டு இவற்றை எதிர்க்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

அனைவரின் நல் வாழ்க்கைக்காக – அனைத்து எல்லைகளையும் கடந்து !

#1world1struggle

Initial supporters:
Bangladesh Anarcho-Syndicalist Federation | Freie Arbeiter*innen Union (FAU) Hamburg | Inter-Factory Workers’ Federation (FBLP) Jakarta | Forum for IT Employees (FITE) India | Garment Workers’ Trade Union Center (GWTUC) Bangladesch | Industrial Workers of the World (IWW) Gainesville | Industrial Workers of the World (IWW) Hamburg

Leave a Reply