அனைத்துலக மே நாள் 2020

இன்றைய நெருக்கடி மேலும் அதிகமான சவால்களை கொடுத்தாலும் அனைத்துலக மே நாள் வலைப்பின்னலில் உள்ள பல்வேறு பெண்ணிய செயல்பாட்டாளர்கள், வெகுசன அமைப்புகள் மற்றும் புரட்சிகர தொழிலாளர் அமைப்புகள் 2020 ஆண்டுக்கான அனைத்துலக மே நாள் அறைகூவலை விடுக்கிறது.

உலகெங்கிலும் உள்ள கூலி தொழிலாளர்களாகிய நாம் கூடுதல் மதிப்பு உற்பத்தியை ஆதரிக்கும் போட்டியில் நிறுத்தப்பட்டு இருக்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் வாழும் இடம், பாலினம், தேசியஇனம் என்பதைக்கடந்து ஒரே விதமான போராட்டத்தில் இருக்கிறோம். பொது சேவைகளுக்கான பட்ஜெட் குறைப்பு, வெளியாட்களிடம் பணிகளை ஒப்படைத்தல், குறைந்துகொண்டே போகும் கூலி, தனியார்மயம், அதிகரிக்கும் வாழ்ககை செலவு, கல்வி கட்டணம் மற்றும் பேரழிவுக்குள்ளாகும் இயற்கை என சில அறிகுறிகளை உலக பொருளாதார அமைப்பில் காண்கிறோம். சுரண்டலையும் போட்டியையும் அடிப்படையாக கொண்ட பொருளாதார அமைப்பு நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் வணிகமயமாவதை நோக்கி தள்ளுகிறது. திறனை மேம்படுத்துவதற்கான அதிகரிக்கும் அழுத்தம், பிரிந்துபோதல், தேவைகளில் இருந்தும்  மக்களிடம் இருந்தும் அந்நியப்படுதல் போன்றவற்றால் நாம் துன்பப் படுகிறோம்.  இது குறித்து நாம் செயல்படுகிறோம் இதனுடன் வாழவும் செய்கிறோம். இது பணியிடமாகவோ, கல்லூரிகளாகவோ அதைவிட அதிகமாக குழந்தை பருவம்  மற்றும் இளமை பருவமாக இருக்கிறது. சந்தை பொருளாதாரமும் மற்றும் அதை சார்ந்த தேசிய அரசுகளின் கட்டமைப்புக்கு பின் உள்ள தர்க்கமானது சமூக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஆற்றலை மேம்படுத்துவதை விட போட்டி மற்றும் மதிப்பு உற்பத்தியின் கட்டளைக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது.

நாம் இந்த கட்டமைப்பை தொந்தரவு செய்ய மட்டும்  விரும்பவில்லை, மாறாக கடந்து வர விரும்புகிறோம்.

முதலாளித்துவ அமைப்பின் நாடு கடந்த தன்மைக்கு ஏற்ப தொழிலாளர்களும் உலகளவில் இணைவது அவசியமாகிறது.

எல்லைகள் கடந்த நமது வலைப்பின்னலால், நமது உள்ளூர் வாழ்வியல் நிலைமையின் உலக தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும். மேலும் இது சுரண்டலுக்கும், மோசமான பணியிட மற்றும் வாழ்வியல் நிலைமைகளுக்கும் எதிரான நமது போராட்டத்தில் புதிய ஆற்றைகளையும், எல்லைகளையும் திறந்து விடும். ஒரே மதிப்பு கூட்டல் சங்கிலி இணைப்பில் உள்ள தொழிலாளர்கள் நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது  நமது பேரம் பேசும் சக்தியை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.

குறிப்பாக தேசியவாதமும், இனவாதமும் உள்ள காலகட்டத்தில் இவைகளுக்கு எதிரான பொது போராட்டமும் எதிர்ப்பும் நமது தேடுதலாக உள்ளது.

எல்லை கடந்து வாழும் அனைத்து மக்களுக்குமான வளமான வாழ்விற்காக!


கொரோனா உலகப் பெருந்தொற்று பற்றிய ஒரு குறிப்பு:

இன்று உலகம் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. உலக நலவாழ்வு அமைப்பின் வழிகாட்டுதல் படி சமூக விலக்கமும் தனிமைப்படுத்திக்கொள்ளுதலும் இந்த பெருந்தொற்றின் பாதிப்பை குறைக்கும் வழிகளாகும். மற்ற எல்லா பேரிடர்களைப்போல இப்போதும் ஏழ்மை நிலையில் உள்ள தொழிலாளிகள் மிகவும் அதிக பாதிப்புகளை சந்திக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலை செய்ய கட்டாயப்படுத்துகின்றன. அதன்மூலம் அவர்களின் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான உரிமையை பறிக்கின்றன. நிறைய தொழிலாளர்கள் வேலை இழந்து கொண்டு இருக்கின்றனர். தெருவோர  வியாபாரிகள், சுயதொழில் செய்வோர் என பல தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். முகாம்களில் உள்ள மக்கள், வீடற்றவர்கள் போன்றோர் தங்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான போதிய பொது சுகாதார வசதி இன்றி உள்ளனர்.

பல்வேறு தாக்குதல்களை தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள இந்த சூழலில், உலக மே நாள் வலைப்பின்னலில் இணைந்துள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள சிண்டிகேட்டுகள், தொழிற்சங்கங்கள் வளர்ந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டு கீழ்காணும்  கோரிக்கைகளுக்காக உலகளவிலான பரப்புரையை செய்ய வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது.

1. அத்தியாவசிய பணியில் இல்லாத தொழிலாளர்கள் அனைவருக்குமான தனிமைப்படுத்திக்கொள்வதற்கான உரிமை

2. அனைத்து தொழிலாளர்களுக்குமான போதிய பொது சுகாதார வசதிகள்

3. அனைவருக்குமான போதிய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுதல்

4. தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு, தொலைபேசி மற்றும் இணையதள கட்டணத்தை உடனடியாக நிறுத்தி வைத்தல்

5. வீட்டு வாடகையை உடனடியாக நிறுத்தி வைத்தல்

Die Reichen sollen für die Krise zahlen!

வளங்களை தன் வசம் கொண்டவர்கள் நெருக்கடியை சமாளிக்கட்டும்!

#ஒருஉலகம்#ஒரு போராட்டம்
#1world1struggle

Supporters:

One comment

  1. Pingback: #۱world1struggle Global May Day 2020 - عصرآنارشیسم

Leave a Reply